Quotessence
Home / Authors / Subramanya Bharathi
Subramanya Bharathi

Subramanya Bharathi Quotes

Writer

Filter quotes by topic

Famous Subramanya Bharathi Quotes

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்; பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்; நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்; ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்; பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!”