Quotessence
Home / Authors / Vairamuthu

Vairamuthu Quotes

Author

Filter quotes by topic

Famous Vairamuthu Quotes

“தோல்வியை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் மனிதர்கள். கன்னம் கிள்ளிச் சொல்லிக் கொடுப்பது வெற்றி; கன்னத்தில் அறைந்து சொல்லிக் கொடுப்பது தோல்வி.”

“இயற்கையின் பெருமையே மானுடத்திற்கான அதன் தியாகம்தான். இயற்கையும் மனிதனும் வேறுவேறன்று. இயற்கையின் சிறுபிரதிதான் மனிதன்; மனிதனின் பெரும்பிரதிதான் இயற்கை. மனித வேர்களின் கீழே கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் கசியும் கருணைதான் இயற்கை.”

“சுவையான கதை; ஆனால் சோக முடிவு." "எல்லா சுகமும் ஒரு சோகத்தில் முடிகிறது; எல்லா சோகமும் ஒரு சுகமாய்க் கனிகிறது. காலனி ஆதிக்கம் உலகச் செல்வத்தை அள்ளிச் சென்றது சோகம்; உலகெங்கும் ஆங்கிலத்தை விட்டுச் சென்றது சுகம்.”

“அவமானம் நேரலாம். ஓர் அவமானமோ காயமோ வெற்றிடமோதான் லட்சியத்திற்கு கருவறையாக முடியும். உடல், மானம் இரண்டையும் தியாகம் செய்ய முடியாதவன் நன்மை செய்ய முடியாது.”

“மனசு பின்னாடி மனுசன் போனான்னா அவன் மிருகம்; மனுசன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா அவன் தெய்வம்." "நீ மிருகமா? தெய்வமா?" "நான் ரெண்டும்தானடா மகனே. மாறிமாறித்தான் இருக்கேன். ஆனா ஒண்ணு, தெய்வமா இருந்தாத் தெரியுது எனக்கு; மிருகமா இருந்தாத் தெரியல.”