“விவேகம் ========= கட்டுப்பாடில்லாமல் தன் மனதை ஓடவிடுவது, ஆபத்தில் முடியும், கட்டுப்பாடில்லாமல் வாகனத்தை ஓட்டிவிடுவது, விபத்தில் முடியும்! இடதுபுறமிருந்து முந்துவதும், வேகத்தை உந்துவதும், எதில் முடியும்? நம்பியவர்களிடமிருந்து நீங்குவதும், ரத்தம் சிந்துவதுமாக முடியும்! நிதானமாக, உன் வண்டியை நீ செலுத்தாவிட்டால், நீ தானமாக, உன் உயிரையே செலுத்த வேண்டி வரும்! வாகன நேரத்தில், எல்லை அடையும் வரை, பொறுமையோடு ஓட்டுபவன் எவன்? வா! கண நேரத்தில், உன்னை அடைவேன்! எருமையோடு காத்திருப்பான் எமன்!” PatienceTamil Author:samura