வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
A source page for quotes linked to Su. Venkatesan.
“ஆசையின் வழியே பயணப்படக் கூடாது. அறிதலின் வழிதான் பயணப்பட வேண்டும். இயற்கை ஆசைக்கான பொருளன்று.”
“மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை.”
“மனிதன் கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனை குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது.”
“அடங்காத வெறியோடு பொறுமையைக் கைக்கொள்வது மட்டுமே மனம் பக்குவப்பட்டதன் உச்ச அடையாளம்.”
“சொல்லின் வலி, உள்ளத்தின் உறுதியை தளர்த்தவல்லது.”
“பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல் கொண்டது.”