Quotessence
Home / Books / வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

Book by Su. Venkatesan · 15 quotes · Hate, Rivalry, Human Nature

Filter quotes by topic

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி Quotes

“ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறான். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.”

“ஆசையின் வழியே பயணப்படக் கூடாது. அறிதலின் வழிதான் பயணப்பட வேண்டும். இயற்கை ஆசைக்கான பொருளன்று.”

“கதை, சொல்லும்போது பெருகக் கூடியது; நினைக்கும்போது திரளக் கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக் கூடியது. வடிவமற்ற ஒன்றின் பேராற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.”

“ஒருவனின் செல்வத்தைக் கவர்ந்திட போரிட்டால் அந்தப் போரில் வெற்றி தோல்வி உண்டு. ஆனால், ஒருவனின் புகழை எதிர்த்து இன்னொருவனால் போரிடவே முடியாது. நீரைப் பாறைகொண்டு நசுக்க முடியாது.”

“மனதின் ஓரத்தில் இருக்கும் அழுக்குக்கூட நம்மை வெட்கித்து தலைகுனிய செய்யும் அளவுக்கு உக்கிரம் ஏறிய பேரன்பு.”

“கபிலர்: "அச்சம் இல்லை என்று சொல்ல நான் பொய்யன் அல்ல. ஆனால், அஞ்சமாட்டேன் எனச் சொல்ல பொய் தேவையில்லை." பாரி: "அதுதான் புலவன். சொல் சுடும்போது சொல்லைச் சுடுவான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இன்றுதான் சொல்லிக் கேட்கிறேன்.”

“மனிதன் கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனை குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது.”

“பாறையின் மேலேறிய உதிரனுக்கு கபிலர் ஏன் ஏறாமல் நிற்கிறார் என்ற காரணம் புரியவில்லை. "நான் எங்கே நிற்கிறேன்?" என்று கேட்டார் கபிலர். "கீழே நிற்கிறீர்கள்" என்றான் உதிரன். "காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது" என்றார். கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை. கபிலர் விளக்கினார். "உண்மை என்பது இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாகக் கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதில்லை.”

“அடங்காத வெறியோடு பொறுமையைக் கைக்கொள்வது மட்டுமே மனம் பக்குவப்பட்டதன் உச்ச அடையாளம்.”

“உங்களுக்குத் தேவையானதையும் அவர்களுக்குத் தேவையானதையும் பரிமாற்றிக் கொள்கிறோம். பகிர்ந்து உண்பதும் பரிமாறி வாழ்வதும் இயற்கை நமக்கு கற்றுக்கொடுத்தவை.”

“பகைமை கொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான். பகை, சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும். போருக்கு தேவை சினமன்று. ஆனால், இதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பகை பின்னுக்குத் தள்ளிவிடும்.”

“பகை, கணம்தோறும் ஊறிப்பெருகக்கூடியது. சூழலில் நிகழும் ஒவ்வொரு காரணத்தையும் பகை தன்னை பெறுக்கிக்கொள்ள இயல்பாக பயன்படுத்தும். வெறும் பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும். பகை மட்டுமே மூட்டியவனால்கூட அணைக்க முடியாத பெருநெருப்பு.”